Lands

இந்தியா

இந்தியக் குடியரசு
இந்தியாவின் கொடி இந்தியாவின் சின்னம்
கொடி
குறிக்கோள்
சத்யமேவ ஜெயதே
(சமஸ்கிருதம்: வாய்மையே வெல்லும்)
நாட்டுப்பண்
ஜன கண மன (Sound இசைக்கோப்பு)
Location of இந்தியாவின்
தலைநகரம் புது தில்லி
28°34′N 77°12′E / 28.567, 77.2
பெரிய நகரம் மும்பை (பம்பாய்) , சென்னை (மதராஸ்)
ஆட்சி மொழி(கள்) இந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் 21 ஏனைய மொழிகள்
அரசு கூட்டாட்சி குடியரசு
- குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல்
- பிரதமர் மன்மோகன் சிங்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து
- பெற்றது ஆகஸ்ட் 15, 1947
பரப்பளவு
- மொத்தம் 3,287,590 கிமீ² (7ஆவது)
1,269,346 சது. மை
- நீர் (%) 9.56
மக்கள்தொகை
- 2005 மதிப்பீடு 1,080,264,388 (2ஆவது)
- 2001 குடிமதிப்பு 1,027,015,247
மொ.தே.உ
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
- மொத்தம் $3.602 டிரில்லியன் (4ஆவது)
- நபர்வரி $3262 (125ஆவது)
ம.வ.சு (2003) 0.602 (மத்திம) (127வது)
நாணயம் ரூபாய் 1 (INR)
நேர வலயம் இந்திய சீர்தர நேரம் (ஒ.ச.நே.+5:30)
- கோடை (ப.சே.நே.) நடைமுறையில்லை (UTC+5:30)
இணைய குறி .in
தொலைபேசி +91
மின்னழுத்தம் 230 V
அலையெண் 50 Hz
1 ஒருமைக்கு Re. (ஒரு ரூபாய்). ஒரு ரூபாய்= 100 பைசா (Paise)

தொகு

இந்தியா (India), தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 கி.மீ. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கையும், மாலத்தீவும் இந்தியக்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.

இந்தியா, ஒரு பில்லியன் மக்களை கொண்ட, உலகின் இரண்டாவது சனத்தொகை மிக்க நாடு. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின.

வரலாறு

கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 வருடங்களுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 600 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.

கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இப்பிரதேசத்தில் மிக முக்கியத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலாகப் பரிச்சயமான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை ஆக்கிரமிப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்த பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும் ,. சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்த கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் நிரூபிக்கப் படவில்லை. இது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.

மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.

அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.

முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாக்கிஸ்தானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.

Sanchi2.jpg


இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய பலங்களில் சிலவாகும். பாக்கிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.

அரசியல் அமைப்பு

இந்தியா 28 மாநிலங்களையும் ஆறு ஒருங்கிணைந்த பிரதேசங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் செயற்கைக் கோள் புகைப்படம்

செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

அரசியல்

புது டெல்லியில், இந்தியாவின் அரச அலுவலகங்கள் பலவற்றைக் கொண்டுள்ள செயலகக் கட்டிடம்

இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.

1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவண் அரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.

2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது.

[தொகு] வெளியுறவும், இராணுவமும்


இந்திய வான்படையின் ஒரு பகுதியான சூக்கோய்-30 MKI

1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன -இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. சிறப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம்.

அண்மைக் காலத்தில், ஐக்கிய அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான உறவுகள் மேம்பட்டுள்ளன. மார்ச் 2006 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சும் கை குலுக்கும் காட்சி.

அண்மைக் காலங்களில் இந்தியா “ஆசியான்” எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், “சார்க்” எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுக்கருச் சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றுடன், துணை இராணுவப் படைகள், கரையோரப் பாதுகாப்புப் படை என்பனவும், இராணுவத்தின் கீழ் வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார். 1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட சிரிக்கும் புத்தர் நடவடிக்கை (Operation Smiling Buddha) எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற “நிலத்துக்கு அடியிலான சோதனைகள்” என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

மாநிலங்களும் பிரதேசங்களும்


இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.

இந்திய தேசப்படம்

  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. லட்சத்தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி

[தொகு] புவியியல்

முதன்மைக் கட்டுரை: இந்தியாவின் புவியியல்


ஜம்மு காஷ்மீரில் தொடங்கி கிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் வரை நீளும் இமய மலை இந்தியாவின் எல்லையாகத் திகழ்கிறது

.

பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமாலய மலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சண்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்கான் பீடபூமி. தக்கான் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பொரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாப்பி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன.

இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.

இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன.

இந்தியாவின் தாவர விலங்கு வளங்கள்

இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறைவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய (endemic) இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன.

இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட மத்திய இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சம வெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் ஞானம் பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.

பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சிங்கவால் மந்தி (Trachypithecus johnii), புபோ பெதோமீ (Bufo beddomii) என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும்.

அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், தேசியப் பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் (Ramsar Convention) எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரம்


வேகமாக வளரும் இந்தியாவின் த.தொ. துறையின் வருமானம் 13 பில்லியன் அளவில் உள்ளது. படத்தில் காண்பது முன்னணி த.தொ. நிறுவனமான இன்ஃபோசிஸ்

விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்லது.

வறுமை நிலை

இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன்[1] மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள்.[2] இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40%[3] மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது.

மக்கள்தொகை பரம்பல்


இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியைக் காட்டும் நிலப்படம்.

உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். பலதரப்பட்ட மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் சாதி, சமயம், மற்றும் மொழி ஆகியவை சமுதாய மற்றும் அரசியல் குழு நிறுவுதலில் முக்கியக் காரணிகளாக உள்ளன. ஏறத்தாழ 70% இந்தியர்கள் நாட்டுப்புறங்களில் வாழ்கிறார்கள். அண்மைப் பத்தாண்டுகளில் நாட்டுப் புறங்களிலிருந்து மக்கள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்வதனால் நகர்ப்புற மக்களின் தொகை பெருமளவு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பெரிய நகரங்களுள், கொல்கத்தா, மும்பாய், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் என்பன அடங்குகின்றன.

ஆப்பிரிக்காக் கண்டத்துக்கு அடுத்தபடியாக, பண்பாடு, மொழி, மரபுரிமை அடிப்படையில் அதிகம் பல்வகைமைத் தன்மை கொண்ட புவியியல் பகுதி இந்தியாவேயாகும்.

மக்கள்தொகை அடிப்படையில் நகரங்கள்
நிலை நகரம் மாநிலம் ம.தொ நிலை நகரம் மாநிலம் ம.தொ
பார் பேச்சு தொகு

மும்பாய்
மும்பாய்
டெல்லி
டெல்லி

1 மும்பாய் மகாராஷ்டிரா 13,662,885 11 ஜெய்ப்பூர் ராஜஸ்தான் 2,997,114
2 டெல்லி டெல்லி 11,954,217 12 லக்னோ உத்தரப் பிரதேசம் 2,621,063
3 பெங்களூரு கர்நடகம் 5,180,533 13 நாக்பூர் மகாராஷ்டிரா 2,359,331
4 கொல்கத்தா மேற்கு வங்காளம் 5,021,458 14 இந்தோர் மத்தியப் பிரதேசம் 1,768,303
5 சென்னை தமிழ் நாடு 4,562,843 15 பாட்னா பீகார் 1,753,543
6 ஐதராபாத் ஆந்திரப் பிரதேசம் 3,980,938 16 போபால் மத்தியப் பிரதேசம் 3,792,375
7 அகமதாபாத் குஜராத் 3,867,336 17 தானே மகாராஷ்டிரா 1,673,465
8 புனே மகாராஷ்டிரா 3,230,322 18 லூதியானா பஞ்சாப் 1,662,325
9 சூரத் குஜராத் 3,124,249 19 ஆக்ரா உத்தரப் பிரதேசம் 1,590,073
10 கான்பூர் உத்தரப் பிரதேசம் 3,067,663 20 வடோதரா குஜராத் 1,487,956
2008 estimation[1]

மொழி

இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களுள் அடங்கும். அவை இந்திய-இரானிய மற்றும் திராவிட மொழிக்குடும்பங்கள். தேவநாகரி எழுத்துருவில் வழங்கப்படும் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். எனினும், பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. அவை கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, வங்காள மொழி, மராத்தி, உருது, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, அசாமிய மொழி, காஷ்மீரி, சிந்தி, நேபாளி, கொங்கனி, சமஸ்கிருதம் முதலியன. நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்.

சமயம்

உலகின் தொன்மையான மதங்களுள் அடங்கக்கூடிய இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன இந்தியாவில் தோன்றியவை. இவற்றுள் இந்து சமயத்தின் தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாது. இந்து சமயத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்றான ரிக்வேதம் உலகின் மிகப் பழைய நூல்களுள் ஒன்று. எனினும் இந்தியாவுக்கு வெளியே இதன் பரவல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஆனால், பௌத்தம் ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இன்றுவரை நிலைபெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து சமயங்கள் வெளிநாடுகளுக்குப் பரவியது ஒருபுறமிருக்க, வெளிச் சமயங்களும் இந்தியாவுக்கு வந்து நிலை பெற்றுள்ளன. இவற்றுள் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்து அரசுகளையும், பேரரசுகளையும் நிறுவிய இஸ்லாமியர்கள் மூலமாக இஸ்லாம் சமயம் இந்தியாவுக்குள் வளரத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்பினர்.

இந்தியாவில் 83% மக்கள் இந்து சமயத்தில் பிறந்தவர்கள். உலகிலேயே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. கிறித்தவம், சீக்கியம், சமணம், அய்யாவழி, பௌத்தம், யூதம், பார்சீகம் ஆகியவை இந்தியாவில் பின்பற்றப்படும் மற்ற சமயங்கள்.

சமூக அமைப்பு

சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் “நான்கு வர்ண” சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இது தவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் (தாசிகள்) என பெண்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாக பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என கூட சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள் போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களை சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாக பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.

சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதை தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

பண்பாடு

இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.

கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை, இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவை தவிர நாட்டார் இசை, தமிழிசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.

உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமஸ்கிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் என பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.

கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி என கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.

பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாக பாவிக்கப்படும் கணித எண்கள், இந்து-அரேபிக் எண்கள் ஆகும். இந்தியாவிலேயே பூச்சியம் என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.

சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.

இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளை காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டை குறிப்பிடத்தக்க அளவு மேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.

பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.

இவற்றையும் பார்க்கவும்:

  • இந்தியத் திரைப்படங்கள்
  • இந்திய இசை
  • இந்திய சாஸ்திரீய இசை
  • இந்திய விழாக்கள்
  • இந்திய இலக்கியம்
  • இந்திய சாஸ்திரீய நடனம்
  • இந்தியக் கிராமிய இசையும் நடனமும்
  • இந்திய உணவு வகை
  • இந்தியக் கட்டிடக்கலை

[தொகு] விளையாட்டு

ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு எனினும் கிரிக்கெட் விளையாட்டே மிகப் பிரபலமாக உள்ளது.டென்னிஸ், செஸ், கால்பந்து (குறிப்பாக கேரளா, வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்) ஆகியவை பிரபலமான பிற விளையாட்டுகளாகும். கபடி ( சடுகுடு ), மல்யுத்தம், கில்லி தண்டா ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். ஒலிம்பிக் போட்டிகளில், தனி நபர் மற்றும் தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் சாதனைகள் பெரிய அளவில் இல்லை. ஹாக்கியில் மட்டும் சில முறைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்த வரையில் உலக அளவிலான இரட்டையர் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சதுரங்கம், கேரம், போலோ, ஸ்னூக்கர், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள் இந்தியாவிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

விடுமுறை நாட்கள்

இந்தியாவில் மூன்று நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவையாவன:

  1. விடுதலை நாள் (ஆகஸ்ட் 15)
  2. குடியரசு நாள் (ஜனவரி 26)
  3. காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2)

இவை தவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

  • இந்திய வரலாற்று காலக் கோடு
  • இந்தியப் பிரதமர்கள்
  • இந்தியக் குடியரசுத் தலைவர்கள்
  • இந்தியாவில் தொடர்புத் துறை
  • இந்தியாவில் போக்குவரத்து, இந்திய இரயில்வே
  • இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்
  • இந்தியாவின் ஆயுதப்படை
  • இந்தியாவின் வெளிநாட்டுத் தொடர்புகள்
  • செல்வாக்குள்ள இந்திய வர்த்தகர்கள்
  • பிரபல இந்தியர்களின் பட்டியல்
  • இந்தியா தொடர்பான தலைப்புக்களின் பட்டியல்
  • இந்தியாவில் மக்கள் தொடர்புச் சாதனங்கள்
  • இந்திய அரசியல் கட்சிகள்
  • குடிமக்களுக்கான கௌரவம்
    • பாரத ரத்னா
    • பத்ம விபூஷண்
    • பத்ம பூஷண்
    • பத்ம ஸ்ரீ

      தமிழ்நாடு

      தமிழ்நாடு
      India Tamil Nadu locator map.svg
      தமிழ்நாடு அமைந்த இடம்
      தலைநகரம் சென்னை
      மிகப்பெரிய நகரம் சென்னை
      ஆட்சி மொழி தமிழ்
      ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா
      முதலமைச்சர் மு. கருணாநிதி
      ஆக்கப்பட்ட நாள் 1640
      பரப்பளவு 130,058 கி.மீ² (?வது)
      மக்கள் தொகை (2001)
      அடர்த்தி
      62,110,839 (6வது)
      478/கி.மீ²
      மாவட்டங்கள் 32

      தமிழ்நாடு (Tamil Nadu) ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. மதராசு மாநிலம் என்று இருந்த பெயர் 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

      பொருளடக்கம்

      [மறை]

      • 1 புவியமைப்பு
      • 2 வரலாறு
        • 2.1 கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை
        • 2.2 கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை
        • 2.3 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை
        • 2.4 14ஆம் நூற்றாண்டு
        • 2.5 17 ஆம் நூற்றாண்டு
        • 2.6 20 ஆம் நூற்றாண்டு
      • 3 பாரம்பரியம்
      • 4 அரசியல்
      • 5 மாவட்டங்கள்
      • 6 மக்கள்
        • 6.1 பழங்குடிகள்
        • 6.2 சமயம்
      • 7 பொருளாதாரம்
        • 7.1 தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
      • 8 சமூக வளர்ச்சி
        • 8.1 கல்வி அறிவு வீதம்
      • 9 பண்பாடு
      • 10 விழாக்கள்
      • 11 சுற்றுலாத்துறை
      • 12 இவற்றையும் பார்க்கவும்
      • 13 மேற்கோள்கள்
      • 14 வெளி இணைப்புகள்

      புவியமைப்பு

      தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

      நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் “வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று” மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

      இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.

      மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு , திருப்பூர், தூத்துக்குடி, மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

      வரலாறு

      சோழ,சேர,பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும்,சிற்பங்களயும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. “வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு” என்கிறது தொல்காப்பியப் பாடல்.

      தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

      மதுரை மீனாட்சியம்மன் கோயில்

      இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

      பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

      கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை

      முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

      கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை

      கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

      இக்காலகட்ட பகுதியில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. [1]

      9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை

      கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.

      இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

      14ஆம் நூற்றாண்டு

      14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய “பாமினி” ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

      ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

      இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

      17 ஆம் நூற்றாண்டு

      1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர்.மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன்.

      வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர். –

      20 ஆம் நூற்றாண்டு

      1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

      பெரியார் - திராவிட இயக்கத்தின் தந்தை.
      படம் உதவி: (c) நா.தேசிகன்

      பாரம்பரியம்

      தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

      சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சி.என். அண்ணாதுரை , இ.வே. ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், விளையனூர் இராமச்சந்திரன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர்,தொல்காப்பியர் , ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அலன் டூரிங், எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.

      அரசியல்


      தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

      தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

      ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

      1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.

      தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.

      பார்க்கவும்: தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்

      மாவட்டங்கள்

      தமிழ்நாடு வரைபடம் http://tnmaps.tn.nic.in/tamil/

      தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.

      • 1. அரியலூர் மாவட்டம்
      • 2. இராமநாதபுரம் மாவட்டம்
      • 3. ஈரோடு மாவட்டம்
      • 4. கடலூர் மாவட்டம்
      • 5. கரூர் மாவட்டம்
      • 6. கன்னியாகுமரி மாவட்டம்
      • 7. காஞ்சிபுரம் மாவட்டம்
      • 8. கிருஷ்ணகிரி மாவட்டம்
      • 9. கோயம்புத்தூர் மாவட்டம்
      • 10. சிவகங்கை மாவட்டம்
      • 11. சென்னை மாவட்டம்
      • 12. சேலம் மாவட்டம்
      • 13. தஞ்சாவூர் மாவட்டம்
      • 14. தர்மபுரி மாவட்டம்
      • 15. திண்டுக்கல் மாவட்டம்
      • 16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
      • 17. திருநெல்வேலி மாவட்டம்
      • 18. திருப்பூர் மாவட்டம்
      • 19. திருவண்ணாமலை மாவட்டம்
      • 20. திருவள்ளூர் மாவட்டம்
      • 21. திருவாரூர் மாவட்டம்
      • 22. தூத்துக்குடி மாவட்டம்
      • 23. தேனி மாவட்டம்
      • 24. நாகப்பட்டினம் மாவட்டம்
      • 25. நாமக்கல் மாவட்டம்
      • 26. நீலகிரி மாவட்டம்
      • 27. புதுக்கோட்டை மாவட்டம்
      • 28. பெரம்பலூர் மாவட்டம்
      • 29. மதுரை மாவட்டம்
      • 30. விருதுநகர் மாவட்டம்
      • 31. விழுப்புரம் மாவட்டம்
      • 32. வேலூர் மாவட்டம்

      மக்கள்

      தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

      பழங்குடிகள்

      தமிழகத்தன் மக்கட்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள்(2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலகிரி, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

      சமயம்

      சமயவாரியாக மக்கள் தொகை [2]
      சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
      மொத்தம் 62,405,679 100%
      இந்துகள் 54,985,079 88.11%
      இசுலாமியர் 3,470,647 5.56%
      கிறித்தவர் 3,785,060 6.07%
      சீக்கியர் 9,545 0.02%
      பௌத்தர் 5,393 0.01%
      சமணர் 83,359 0.13%
      ஏனைய 7,252 0.01%
      குறிப்பிடாதோர் 59,344 0.10%

      பொருளாதாரம்

      தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறுஆழ் குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

      தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

      தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றார்கள்.[1]

      சமூக வளர்ச்சி

      சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

      கல்வி அறிவு வீதம்

    • மொத்தம்: 73.47%
    • ஆண்கள்: 82.33%
    • பெண்கள்: 64.55%

    பண்பாடு

    தமிழ்நாடு அரசு குறியீடுகள்
    மொழி தமிழ்
    சின்னம் திருவில்லிபுத்தூர் கோபுரம்
    பாட்டு தமிழ்த்தாய் வாழ்த்து
    விலங்கு வரையாடு
    பறவை மரகதப் புறா - en:Emerald Dove
    மரம் பனை
    பூ செங்காந்தள் - en:Gloriosa lily
    விளையாட்டு கபடி
    ஆடல் பரதநாட்டியம்

    விழாக்கள்

  • பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும்அழைகப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (ஜனவரி 14 அல்லது 15) இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
  • நோன்பு பெருநாள், பக்ரீத், முகரம் இஸ்லாமியப் புத்தாண்டு
  • பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் பிறந்த நாள், சரஸ்வதி (கல்விக் கடவுள்) பூஜை, ஆயுத பூஜை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கொடைக்கொண்டாட்டமாம் சித்திரைத்திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 14 அல்லது 15) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.

கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை

சுற்றுலாத்துறை


தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது.இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன.கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளூவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.

    Leave a Comment